கலியுக வரதராசப் பெருமாள் கோயில் பெண்கள் பள்ளியில் தேசிய சட்ட பணிகள் விழிப்புணர்வு முகாம்

6 months ago 15

அரியலூர், நவ. 11: அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், தேசிய சட்டப் பணிகள் தினத்தையொட்டி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான ராதாகிருஷ்ணன் பேசுகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 39 ஏ , பொதுமக்களுக்கான சட்ட உதவியையும், அனைவருக்குமான நீதியையும் உறுதி செய்கிறது.பொதுமக்களுக்கான சட்ட உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்கிடும் நோக்கில் சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் சட்டம் 1987}இல் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் நாடெங்கும் சட்டப் பணிகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சட்டங்களின் படி

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மக்கள் நீதிமன்றங்களை நிறுவியும், பல்வேறு தனித் திட்டங்களை வகுத்தும் பொதுமக்களுக்கு சட்ட உதவிகளை அளித்துவரு கின்றன.பொதுமக்கள் சொத்து பிரச்னை, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை, குடும்ப உறவுகளிடையே எழும் பிரச்னை, விபத்து மற்றும் வாகன காப்பீட்டு வழக்குகள், தொழிலாளர் நலன் சார்ந்த வழக்குகள் மற்றும் வங்கிக் கடன் சார்ந்த வழக்குகள் என பல்வேறு பிரச்னைகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் அணுகி சமூகமான தீர்வை பெறலாம்.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சட்ட உதவி மற்றும் ஆலோசனைகளைப் பெற்றிட எப்பொழுதும் 15100 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினை தொடர்பு கொள்ளலாம்.இந்நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர். இதே போல் மணக்குடியில் பணியாற்றிக் கொண்டிருந்த நூறு நாள் திட்டப் பணியாளர்களிடமும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post கலியுக வரதராசப் பெருமாள் கோயில் பெண்கள் பள்ளியில் தேசிய சட்ட பணிகள் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article