கலங்கல் பகுதியில் குளித்தபோது மாயமான மாணவனை 2வது நாளாக தேடும் பணி தீவிரம்: சோகத்தில் மூழ்கிய கிராமம்

4 weeks ago 4

மதுராந்தகம்: மதுராந்தகம் கலங்கல் பகுதியில் குளித்தபோது மாயமான மாணவனை நேற்று 2வது நாளாக தேடும் பணிகள் தீவிரமாக நடந்தது. வெள்ளத்தில் மூழ்கிய மாணவனை தேடியும் கிடைக்காததால் 2வது நாளாக அப்பகுதி கிராமத்தினர் சோகத்தில் மூழ்கினர். மதுராந்தகம் அடுத்த கருங்குழி மலைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி இவருடைய மகன் புவனேஷ் (16). இவர், நேற்று முன்தினம் மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரிநீர் போக்கி பகுதியயான கலங்கல் நீரில் 5 மாணவர்களுடன் குளித்தார். அப்போது, புவனேஷ் பள்ளி மாணவன் மட்டும் நீரில் மூழ்கி மாயமானார்.

இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் மதுராந்தகம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரில் மாயமான மாணவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்தப் பகுதியை இருள் சூழ்ந்ததால் தேடுதலை கைவிட்டு சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சென்னை – திருச்சி நெஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், டிஎஸ்பி மேகலா மறியல் செய்தவர்களிடம் மாணவனை தேடி கண்டுபிடித்து தரப்படும் என பேச்சுவார்த்தை நடத்தி கலையும் படி கூறினார்.

இதனைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், மீண்டும் நேற்று காலை போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் மாயமான மாணவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த சென்னை மெரினா குழுவினரும் மாணவனின் உடலை நீரில் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், நேற்று மாலை வரை மாணவனின் உடல் கிடைக்காதால் உறவினர்களும் அப்பகுதி மக்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

The post கலங்கல் பகுதியில் குளித்தபோது மாயமான மாணவனை 2வது நாளாக தேடும் பணி தீவிரம்: சோகத்தில் மூழ்கிய கிராமம் appeared first on Dinakaran.

Read Entire Article