கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 months ago 24

சென்னை,

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 50-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு கிண்டி காமராஜர் நினைவிடத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு மலரஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு, கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய விடுதலைக்காகப் போராடி இன்னல்களை எதிர்கொண்டு, பின்னாளில் முதல்-அமைச்சராகத் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் தொழில்வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்த பெருந்தலைவர் காமராஜர் நினைவுநாள்! காந்தியப் பாதையிலிருந்து கடைசிவரை விலகாத கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இந்திய விடுதலைக்காகப் போராடி இன்னல்களை எதிர்கொண்டு, பின்னாளில் முதலமைச்சராகத் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் தொழில்வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களது நினைவுநாள்!

காந்தியப் பாதையிலிருந்து கடைசிவரை விலகாத கர்மவீரரின் வாழ்வு காட்டும்… pic.twitter.com/fM96TdChaP

— M.K.Stalin (@mkstalin) October 2, 2024

Read Entire Article