கர்நாடகாவில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை

12 hours ago 6

மங்களூரு,

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் சூரத்கல் தாகுலா நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். இந்து அமைப்பு மற்றும் பாஜக பிரமுகரான இவரை மர்ம நபர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். பிரவீன் நெட்டார் கொலைக்கு பழிக்குபழியாக கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி பாசில் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

பாசில் கொலை தொடர்பாக பாஜக, பஜ்ரங்தள அமைப்பு பிரமுகரான சுகாஷ் ரெட்டி என்பவரை பஜ்பே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று இரவு மங்களூரு அருகே சின்னிபதவு வழியாக சுகாஷ் ஷெட்டி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள், காரை வழி மறித்து அரிவாளால் சுகாஷ் ஷெட்டியை வெட்டினர். இதில் பலத்தகாயம் அடைந்த சுகாஷ் ஷெட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

போலீசார் விசாரணையில் பாசில் கொலைக்கு பழிக்குபழியாக சுகாஷ் ஷெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 10க்கும் மேற்ப்பட்ட தனிப்படைகள் அமைத்து கொளையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். சுகாஷ் ஷெட்டியை மர்ம நபர்கள் விரட்டி சென்று அரிவாளால் வெட்டும் காட்சிகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுகாஷ் ஷெட்டி உடல் மங்களூரு ஏ.ஜே. ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பாஜக எம்.எல்.ஏக்கள் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் குவிந்துள்ளனர். சுகாஷ் ஷெட்டி கொல்லப்பட்டதையடுத்து மங்களூரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. சுஹாஸ் ஷெட்டி இறுதி ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

தட்சண கன்னடா மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வருகிற 6-ம் தேதி வரை 144 தடை உத்தரவு விதித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தடை வருகிற 6-ம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும். இன்று அதிகாலையில் தனியார் பஸ்கள் மீது சுகாஷ் ஷெட்டி ஆதரவாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனா போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுகாஷ் ஷெட்டி கொலையை கண்டித்து இன்று தட்சிண கன்னட மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷித் அமைப்பு சார்பில் பந்த் நடைபெற்றது.

Read Entire Article