பெங்களூரு: மதுகிரி பாஜ மாவட்ட தலைவரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் காதிலிங்கப்பாவை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பாஜ மாநிலத் தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தியுள்ளார். கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் துர்கா ஸ்ரீ ஓட்டல் சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மதுகிரி பாஜ மாவட்ட தலைவர் ஹனுமந்த்கவுடா நிர்வாகிகளுடன் கூட்டமாக நின்றிருந்தார். இதைபார்த்த எஸ்ஐ காதிலிங்கப்பா, கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் பாஜ மாவட்ட தலைவர் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்ஐ அவரை தாக்கியுள்ளார். இதையடுத்து போலீஸ் எஸ்ஐயை பாஜ மாவட்ட தலைவர் பதிலுக்கு தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஜயேந்திரா, ‘ மதுகிரி பாஜ மாவட்டத் தலைவர் ஹனுமந்த்கவுடாவை காவல் உதவி ஆய்வாளர் காதிலிங்கப்பா தாக்கியிருக்கிறார். அவரை டிஜிபி உடனடியாக சஸ்பென்ட் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜ மக்களுடன் களத்தில் இறங்கி போராடும்’’ என்று எச்சரித்துள்ளார்.
The post கர்நாடகாவில் பரபரப்பு பாஜ மாவட்ட தலைவர் எஸ்ஐ நடுரோட்டில் சண்டை appeared first on Dinakaran.