பெங்களூரு: கர்நாடக மாநிலம் பீதர் நகரில் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் பீதர் நகரில் எஸ்.பி.ஐ. வங்கி உள்ளது. அந்த வங்கியில் இருந்து சுமார் காலை 11.30 மணியளவில் வங்கி ஊழியர்கள் 3 பேர் பாதுகாப்பான நான்கு சக்கர வாகனத்தில் வந்தனர். அதன் பின்னர் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காக பணப்பெட்டியை எடுத்து கொண்டு இறங்கினார்கள். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் வங்கி ஊழியர்களை சுட்டு விட்டு பணப்பெட்டியை எடுத்து சென்று விட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் வங்கி ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த மற்றொரு ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையடித்தவர்களை பிடிக்க பீதர் போலீசார் 4 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்தி வங்கி ஊழியர்களிடம் இருந்து பணப்பெட்டியை எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எடுத்தியுள்ளது.
The post கர்நாடகாவில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு.. வங்கி ஊழியர் உயிரிழப்பு: கொள்ளையர்களை தேடும் தனிப்படை!! appeared first on Dinakaran.