
பெங்களூரு,
கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குழாயில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பகுதியில் சிலிண்டர்களுக்கு பதிலாக எரிவாயுவானது குழாய்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு திட்டமானது பல ஆண்டுகளாக உள்ளது . இந்நிலையில் இந்த குழாயின் இரண்டு இடத்தில் எரிவாயுவானது கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவால் அங்கு தீ ஏற்பட்டது.
இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படாத நிலையிலும் கசிவு மீண்டும் ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என மக்கம் அச்சமடைந்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த கசிவு எவ்வாறு ஏற்பட்டிருக்கும் என விசாரணை நடத்தி வருகின்றனர்.