கர்நாடகா: ஓட்டல்களில் இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்த தடை

4 hours ago 1

பெங்களூரு,

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 251 இடங்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான ஓட்டல்களில் இட்லியை வேக வைப்பதற்கு துணிகளுக்கு பதில், பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டு ராவ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, "பிளாஸ்டிக்கில் புற்றுநோய் காரணிகள் இருப்பதால், இது இட்லியில் சேரக்கூடும் என்பதால் இதைச் செய்யக்கூடாது. இது நடக்காமல் இருக்க சுகாதாரத்துறை விரைவில் அதிகாரப்பூர்வ உத்தரவுகளை பிறப்பிக்கும், மேலும் விதியை மீறும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிராகவோ அல்லது பிளாஸ்டிக் தாள்களைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். 

Read Entire Article