கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏஜிஐ மில்டெக் நிறுவனம் ஓசூரில் ₹836 கோடியில் முதலீடு: 2000 பேருக்கு வேலைவாய்ப்பு

3 weeks ago 5

சென்னை: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏஜிஐ மில்டெக் நிறுவனம் ரூ.836 கோடி முதலீட்டில் ஓசூரில் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இதன் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகிறது. அரிசி அரைக்கும் இயந்திரங்களை தயாரிப்பதில் இந்தியாவில் ஏஜிஐ நிறுவனம் முதன்மையாக உள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ஏஜிஐ மில்டெக் நிறுவனம் தனது இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க உள்ளது.

அதன்படி ஏஜிஐ மில்டெக் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சுமார் ரூ.836 கோடி முதலீட்டில் 55 ஏக்கரான 7,25,250 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான உற்பத்தி வளாகத்தை அமைக்க உள்ளது. கொளதாசபுரம் ஊராட்சியில் அமைய உள்ள இந்த நிறுவனம் மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல் இந்த முதலீட்டு ஓசூர் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாக அமைய உள்ளது.

The post கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏஜிஐ மில்டெக் நிறுவனம் ஓசூரில் ₹836 கோடியில் முதலீடு: 2000 பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article