கர்நாடக மது கடத்தியவர் கைது

1 week ago 3

 

ஈரோடு: சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், ஆசனூர் போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அவர் கர்நாடக மது பாட்டில்களை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர் கோவை மாவட்டம், காரமடை, குலாலபுரத்தை சேர்ந்த நாகராஜ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 7 மது பாக்கெட் மற்றும் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

The post கர்நாடக மது கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article