பெங்களூரு: பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, கர்நாடக டிரான்பரன்ஸி பப்பளிக் கொள்முதல் சட்டத்தில் முஸ்லீம் ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர்களில் 4 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜ இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு அதிக நிதி ஒதுக்கியதால் ஹலால் பட்ஜெட் என்று விமர்சித்துள்ளது. இஸ்லாமியர்கள் வாக்குகளை பெறுவதற்காகவே காங்கிரஸ் அரசு இம்முடிவு எடுத்துள்ளது என்று விமர்சித்துள்ளது.
The post கர்நாடக அமைச்சரவை முடிவு முஸ்லீம் ஒப்பந்ததாரர்களுக்கு அரசு டெண்டரில் 4% இடஒதுக்கீடு appeared first on Dinakaran.