கரையை கடந்த பெஞ்சல் புயல் வலுவிழந்தது!

3 days ago 3

சென்னை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'பெஞ்சல்' என பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் நேற்று இரவு மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் சென்னை உள்பட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது.

பெஞ்சல் புயல் காரணமாக பெய்த பெருமழையால் சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரையைக் கடந்த பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. கடந்த 12 மணி நேரமாக நகராமல் புதுச்சேரிக்கு அருகே மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு கணித்துள்ளது.

சென்னைக்கு தென்மேற்கே 120 கி.மீ. தொலைவிலும், கடலூருக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

Read Entire Article