கருர், மே 17: தமிழகத்தில் கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. அதில், கரூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை 188 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு எழுதினர். 85 பள்ளிகள் 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளன. அதில், 35 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைடந்துள்ளன. அதன்படி, கருர் மாவட்டம், புன்னம் ஆதி திராவிடர் நலப்பள்ளி, சணப்பிரட்டி ஆதி திராவிடர் நலப்பள்ளி, சின்னமநாயக்கன்பட்டி ஆதி திராவிடர் நலப்பள்ளி, கோட்டமேடு ஆதி திராவிடர் நலப்பள்ளி, மாவத்தூர் ஆதி திராவிடர் நலப்பள்ளி, நெய்தலூர் ஆதி திராவிடர் நலப்பள்ளி, கோட்டமேடு மாநகராட்சி பள்ளி, வாங்கல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சின்னதாராபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கருர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தோட்டக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி, கரூர் அரசு மேல்நிலைப் பள்ளி,
கருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரிய திருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, வரிக்காபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கோவிலுர் அரசு மேல்நிலைப் பள்ளி, என்.புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி, செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி. மேலும், சீத்தப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லூரான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, நாகனூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ராச்சாண்டார் திருமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தம்மம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, சுக்காம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, திம்மாச்சிபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மஞ்சபுளிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, உள்ளிட்ட 35 அரசு பள்ளிகள் 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளன.
The post கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 35 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி appeared first on Dinakaran.