கரூர்- சர்ச் கார்னரில் வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் மரண குழி

1 week ago 3

*சீரமைக்க கோரிக்கை

கரூர் : கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆசாத் ரோடு சர்ச் கார்னர் பகுதியில் நீண்டநாட்களாக வாகன ஓட்டிகளை பயமுறுத்திக்கொண்டு மரணக் குழியாக உள்ளது. இதனை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாநகராட்சி 23 வது வார்டு உட்பட்ட அதிக பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாகும். இப்பகுதியில் முக்கியமான கல்வி நிறுவனங்கள், காவல் நிலையம் ,மாநகராட்சி அலுவலகம் உள்ளது. மேலும் இப்பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பெரிய அளவிலான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது.

இந்தநீர்த்தோக்க தொட்டியில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களில் குடத்தின் வாயிலாகவும் பாத்திரத்திலும் தண்ணீர் பிடித்து செல்வது வழக்கம். மேலும் ஆசாத் ரோட்டில் இருந்து சர்ச் கார்னர் வரும் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நேர் எதிரில் இடப்புறத்தில் உள்ள திருப்பம் அருகே நீண்ட நாட்களாக ரோட்டில் குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால் பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டுகள் சைடு மாறி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டுள்ளது. எனது மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரி செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்னர்.

The post கரூர்- சர்ச் கார்னரில் வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் மரண குழி appeared first on Dinakaran.

Read Entire Article