க.பரமத்தி : கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் விவசாய உபகரண பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர்.
க.பரமத்தியில் மத்திய பிர தேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் முகாம் இட்டு உள்ளனர். இவர்கள் விவசாயிகள் தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய அரி வாள்களை பல்வேறு வடி வத்தில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து அவர்களிடம் கேட்டபோது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து வந்துள்ளோம். நாங்கள் மட்டுமல்லாது குடும்ப நண்பர்களையும் அழைத்து வந்திருக்கிறோம். எங்களுடைய வேலை முழுவதும் விவசாயிகளுக்கு தேவையான அரிவாள், சிறிய அரிவாள், நடுத்தர அரிவாள் உள்ளிட்ட பல் வேறு வகையான விவசாயத்திற்கு சம்பந்தப்பட்ட உபகரணங்களை தயாரித்து வருகிறோம்.
இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் இந்த பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.
தொடர்ந்து பல்வேறு விவசாய பொருட்கள் விற்பனை செய்கிறோம். அதனால் எங்களுக்கு விவசாயிகள் பெரிதும் ஆதரவு தருகின்றனர். என்பதால் நாங்கள் முழுமையாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட பகுதிகளுக்கு இதுபோன்ற கிராம பகுதிகளில் இப்பணிகளை செய்து எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம் என்றனர்.
வடநாட்டு தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் முகாமிட்டு முகாமிடம் இடத்திலேயே விவசாயத்திற்கு தேவையான பொருட்களை நேரடியாக தயாரித்து வழங்குவதால் கிராம புற விவசாயிகள் விரும்பி ஆர்வமுடன் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
The post கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் விவசாய உபகரணங்கள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.