கரூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து

6 months ago 22

கரூர்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று நேற்று(19.12.2024) இரவு புறப்பட்டது. இந்த பஸ் கரூர் மாவட்டம் லாலாபேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் நேற்று நள்ளிரவு சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லாலாபேட்டை போலீசார் கிரேன் உதவியுடன் பஸ்ஸை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் பஸ் டிரைவர், கிளீனர், 2 பெண் பயணிகள் உட்பட 6 பேர் பயணம் செய்த நிலையில், அதிஷ்டவசமாக 6 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

Read Entire Article