கரூர்: கரூர் அருகே ஆம்னி பேருந்தும் சுற்றுலா வேனும் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநர், சிறுவன், சிறுமி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 14 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று (மே 17) அதிகாலை கரூர் அருகேயுள்ள நாவல் நகர் பகுதியில் சென்றபோது சின்னவடுகப்பட்டியில் இருந்து உப்பிடமங்கலம் நோக்கி முன்னால் சென்றுக் கொண்டிருந்த ட்ராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதியது.இதில் நிலைத்தடுமாறிய பேருந்து சாலை மையத்தடுப்பை தாண்டி கோவில்பட்டியில் இருந்து ஏற்காடுக்கு 32 பயணிகளுடன் சுற்றுலா சென்ற வேன் மீது மோதியது.