கரூர், ஜூன் 23: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக சிக்கிள்செல் அனீமியா தினத்தையொட்டி நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
உலக சிக்கிள்செல் அனீமியா தினம் ஜூன் 19ம்தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. சிக்கிள்செல் அனீமியா ஒரு மரபியல் நோயாகும் இந்த நோய் பாதிப்பு பொதுவாக பழங்குயினர்களுக்கு அதிகமாக வர வாய்ப்புள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சிவப்பணுக்குள் வட்ட வடிவமாக இல்லாமல் பிறைவடிமாக மாறுகிறது. இதனால், ரத்தத்தில் ஏற்படும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாகவும், ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவது, நுரையீரல், சிறுநீரகம், மூளை உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுககு வளர்ச்சி குறைவு, கை விரல்கள் மற்றும் கால் விரல்களில் அதிகளவு வலி, ரத்த சோகை, மண்ணீரல் நீட்சி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். மரபணு சிகிச்சை மற்றும் ரத்தம் செலுத்துதல், எலும்பு மஞ்ஜை மாற்றுதல் சிகிச்சை போன்ற சிகிச்சைகள் மூலம் சிக்கிள்செல் அனீமியா நோயை கட்டுப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. இநத நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலம் நோய் பாதிப்பினை சரியான நேரத்தில் கண்டறிந்து தாமதமின்றி சிகிச்சை அளித்து நோயின் தாக்கத்தை குறைக்க முடியும். இந்த நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்திட கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவ கல்லூரி டீன் துவக்கி வைத்தார். இந்த பேரணியில் அனைத்து துறை பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் அனைவருக்கும் விழிப்புணர்வு கொண்ட நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
The post கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் சிக்கிள்செல் அனீமியா நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.