திண்டுக்கல், நவ 28: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்ததாவது: வேடசந்தூர் வட்டம் பிலாத்து கிராமம் ஸிஸிறி குரூப்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ், அழகு நிநி கிரானைட் அமைவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் டிச.3ம் தேதி காலை 11.00 மணியளவில் வடமதுரை தென்னம்ம்பட்டி கிராமம் பரமசிவம் தங்கம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இந்நிலையில் தற்போது நிர்வாக காரணங்களால் பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.