தேவையான பொருட்கள்:
கருணைக்கிழங்கு – 1/4 கிலோ
பாசிப்பயிறு- 1/4 கப்
வெங்காயம்- 2
தக்காளி- 2
புளி கரைசல் – தேவைக்கு நல்லெண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல்- 1/4 கப்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 5 பல்
உப்பு – தேவைக்கு
பெருங்காயம்- 2 சிட்டிகை
கருவேப்பிலை- சிறிது
வறுத்து அரைக்க
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன் மிளகு – 2 டீஸ்பூன்
கசகசா – 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
செய்முறை:
வறுத்து அரைக்கத் தந்துள்ள பொருள்களை பதமாக சிறு தீயில் வைத்து மணம் வர வறுத்து பொடித்துக் கொள்ளுங்கள். கருணைக்கிழங்கை சுத்தம் செய்து நறுக்கி குக்கரில் போட்டு அதனுடன் பாசிப்பயறு, தக்காளி சேர்த்து வேகவைத்து எடுத்து மசிக்கவும்.அடிகனமான கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து அத்துடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்த தேங்காய் மற்றும் தனியா மசாலை சேர்த்து தேவையான புளிக்கரைசல் ஊற்றி கொதித்ததும் மசித்த கிழங்குக் கலவை மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் போது பெருங்காயம் தூவிக் கலந்து இறக்கவும். சோற்றுக்கு போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
The post கருணைக்கிழங்கு கார குழம்பு appeared first on Dinakaran.