கருக்கலைப்பு செய்யாதீர்கள் போப் கோரிக்கை

2 days ago 2

ரோம்: கருக்கலைப்பை நிராகரிக்க வேண்டும், கருத்தரித்தல் முதல் இயற்கை மரணம் வரை உயிரை பாதுகாக்கவும் மதிக்கவும் வேண்டுமென புத்தாண்டு செய்தியாக போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார். புத்தாண்டு தினமான நேற்று ரோமின் வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இயேசுவின் தாயார் மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புத்தாண்டு தினத்தை போப் பிரான்சிஸ் கொண்டாடினார்.

அப்போது அவர் ஆற்றிய உரையில், ‘‘ஒரு பெண்ணால் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பராமரிக்க வேண்டும். கருவில் உள்ள வாழ்க்கை, குழந்தைகளின் வாழ்க்கை, துன்பப்படுபவர்களின் வாழ்க்கை, ஏழைகள், முதியவர்கள், தனிமையில் இருப்பவர்கள், இறப்பவர்கள் என வாழ்க்கையின் ஒவ்வொரு விலைமதிப்பற்ற பரிசையும் பாதுகாக்க அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். கருவுற்றல் முதல் இயற்கை மரணம் வரை வாழ்வின் கண்ணியத்தை மதிக்க உறுதியான அர்ப்பணிப்பை வேண்டுகிறேன். இதன் மூலம் ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கையை போற்றவும், எதிர்காலத்தை நம்பிக்கையுடனும் பார்க்க முடியும்’’ என்றார்.

The post கருக்கலைப்பு செய்யாதீர்கள் போப் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article