கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா

3 months ago 18

கயானா: கரீபியன் லீக் டி20 தொடரில் அபாரமாக ஆடிய கயானா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பார்படாஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது. வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரிபீயன் லீக் டி20 தொடரின் 2வது குவாலிபயர் போட்டி கயானா மற்றும் பார்படாஸ் இடையே இன்று காலை நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பார்படாஸ் அணியில் இன்பார்ம் பிளேயரான குவிண்டன் டி காக் ரன்களில் மோட்டி பந்துவீச்சில் வெளியேறினார். கேப்டன் பவல் 12 ரன்களில் நடையை கட்ட பொறுப்புடன் ஆடிய டேவிட் மில்லர் 26 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார்.

அதில் 2 போர்கள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப பார்படாஸ் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் குவித்தது. கயானா பந்துவீச்சில் ஷெப்பர்ட் 3 விக்கெட்டுகளும், மொயின் அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கயானா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் மற்றும் மொயின் அலி பார்படாஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

நவீன் உல் ஹக் வீசிய 4வது ஓவரை நாலா பக்கமும் சிதறவிட்ட குர்பாஸ் 2 போர்கள் 1 சிக்ஸர் உட்பட 18 ரன்கள் சேர்த்தார். தீக்சனா ஓவரில் குர்பாஸ் வெளியேற, பவர் பிளே முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு ஷாய் ஹோப் தன் பங்குக்கு அதிரடி காட்ட 14.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து கயானா அணி வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. செயிண்ட் லூசியா மற்றும் கயானா அணிகள் மோதும் இறுதிப் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

The post கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா appeared first on Dinakaran.

Read Entire Article