கராச்சி விமான நிலையத்தை அதிர வைத்த பயங்கர வெடிச்சத்தம்

4 months ago 28

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானின் சிந்து மகாண தலைநகரான கராச்சியில் மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. விமான நிலையம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கராச்சி நகரமே குலுங்கும் அளவுக்கு பயங்கர சத்தம் கேட்டதால், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே வசித்த மக்கள் பீதியில் உறைந்தனர்.

நிகழ்விடத்தில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் அங்குள்ள ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கராச்சி நகரில் பல்வேறு பகுதிகளிலும் அடுத்தடுத்து வெடிப்பு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. வெடிகுண்டு தாக்குதலா?அல்லது வேறு ஏதேனும் வெடிப்பு சம்பவமா என்பது பற்றி தற்போது வரை உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

கராச்சி விமான நிலையம் அருகே ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கராச்சி விமான நிலையத்தை சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளது. வெடிப்பு சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சில கார்களும் தீ பிடித்து எரிந்தன. விரைந்து வந்த தீ அணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தியுள்ளன.  

Read Entire Article