பணியிடங்கள் விவரம்
A. Deputy Manager (IT):
1. Deputy Manager (IT)- Application Developer: 2 இடங்கள் (பொது). தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ தகவல் தொழில்நுட்பம்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.
2. Deputy Manager (Cyber Security)- 1 இடம் (பொது). தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ தகவல் தொழில்நுட்பம்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருப்பதோடு சைபர் செக்யூரிட்டியில் முதுநிலை பட்டம் அல்லது சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
3. Deputy Manager (IT)- Open Source Application Developer: 1 இடம் (எஸ்சி). தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில் நுட்பம்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.
வயது: 24.11.2024 அன்று 35க்குள். சம்பளம்: ரூ.50,000-1,60,000.
B. Finance & Accounts
4. Assistant Manager (F & A): 10 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்டி-1). வயது: 24.11.2024 அன்று 30க்குள். தகுதி: பி.காம்., பட்டப்படிப்புடன் சிஏ/ஐசிடபிள்யூஏ படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.40,000- 1,40,000.
C. Human Resource
5. Assistant Manager (HR): 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 24.11.2024 அன்று 30க்குள். தகுதி: பெர்சனல் மேனேஜ்மென்ட்/இன்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ்/ மாஸ்டர் ஆப் சோஷியல் வொர்க் ஆகிய பாடங்களில் மனித வளம் ஒரு பாடத்துடன் 60% மதிப்பெண்களுடன் எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பெர்சனல் மேனேஜ்மென்ட் பாடத்தில் மனிதவளம் பாடத்துடன் கூடிய 60% மதிப்பெண்களுடன் 2 ஆண்டு முழுநேர டிப்ளமோ. சம்பளம்: ரூ.40,000-1,40,000.
D. Materials Management
6. Assistant Manager (Materials Management): 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). வயது: 24.11.2024 அன்று 30க்குள். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/பல்ப் மற்றும் பேப்பர் டெக்னாலஜி/ எலக்ட்ரானிக்ஸ்/ பிரின்டிங் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் 60% தேர்ச்சியுடன் முழு நேர பி.இ., மற்றும் மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட்/ஸ்டோர்ஸ் மேனேஜ்மென்ட்/ பர்ச்சேஸ்/ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட்/சப்ளை செயின் மேனேஜ்மென்ட்/லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் ஆகிய பாடங்களில் எம்பிஏ அல்லது 2 ஆண்டு முதுநிலை பட்டம் அல்லது முதுநிலை டிப்ளமோ. சம்பளம்: ரூ.40,000-1,40,000.
E. Information Technology
7. Assistant Manager (IT): 1 இடம் (ஓபிசி). வயது: 24.11.2024 அன்று 30க்குள். தகுதி: 60% மதிப்பெண்களுடன் முழு நேர எம்சிஏ/ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ஐடி பாடங்களில் 60% தேர்ச்சியுடன் பி.டெக்., சம்பளம்: ரூ.40,000-1,40,000.
F. Legal
8. Assistant Manager (Legal): 1 இடம் (பொது). வயது: 24.11.2024 அன்று 30க்குள். தகுதி: 60% மதிப்பெண்களுடன் பிஎல் தேர்ச்சி. தேசிய சட்டப்பள்ளி அல்லது டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்திருப்பது விரும்பத்தக்கது.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் கட்டணம் ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.spmcil.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.11.2024.
The post கரன்சி அச்சகத்தில் அதிகாரி பணிகள் appeared first on Dinakaran.