திருவாரூர், மே 17: திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளின் பட்டியல் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 2024-&25ம் கல்வியாண்டின்படி திருவாரூர் மாவட்டத்தில் துவக்க அனுமதி பெற்று செயல்படும் அனைத்துவகை தனியார் பள்ளிகளின் விவரங்கள் திருவாரூர் மாவட்ட நிர்வாக இணையதளமான https://tiruvarur.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு முன்னதாக மாவட்டத்தில் துவக்க அனுமதி பெற்று செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளின் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் சரிபார்த்து அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
The post திருவாரூர் மாவட்ட தனியார் பள்ளிகளின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடு appeared first on Dinakaran.