கம்பு பிரவுனி

3 weeks ago 5

தேவையான பொருட்கள்

கம்பு மாவு – 3/4 கப்
முட்டை – 2
சர்க்கரை – 1/2 கப்
சன் ஃபிளவர் ரீஃபைண்ட் ஆயில் – 3/4 கப்
கோகோ பவுடர் – 1/2 கப்
வெனிலா எசன்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1/4 டேபிள் ஸ்பூன்
காபி தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய சாக்லேட் துண்டுகள் – 1/4 கப்
சிசீலிங் தட்டு – 2
ஐஸ்க்ரீம் – 2 ஸ்கூப்
சாக்லேட் சாஸ் – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டை, 1/2 கப் சர்க்கரை, 3/4 கப் சன் ஃபிளவர் ரீஃபைண்ட் ஆயில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் 1/2 கப் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக சர்க்கரை கரையும் வரை கலந்து கொள்ளவும். இதில் 1 டேபிள் ஸ்பூன் வெனிலா எசன்ஸ், 1/4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/4 டீஸ்பூன் உப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் காபி பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது இதில் 3/4 கப் கம்பு மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனுடன் 1/4 கப் சிறிதாக நறுக்கிய சாக்லேட் துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது அதை ஒரு கேக் டின்னில் மாற்றிக் கொள்ளவும். (கேக் டின் மேல் பேக்கிங் ஷீட் போட்டுக் கொள்ளவும்). இதை ஓவனில் 180°C 25 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை பேக் செய்து கொள்ளவும். இப்பொழுது சிசீலிங் தட்டை சூடுபடுத்திய பின் அதன் மேல் ஒரு பிரவுனி துண்டு வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் சாஸ் சேர்த்து பரிமாறவும்.

 

The post கம்பு பிரவுனி appeared first on Dinakaran.

Read Entire Article