கம்பீரால்தான் விராட் கோலி ஆட்டம் இழக்கிறார் என்று உங்களால் கூற முடியாது - இந்திய முன்னாள் வீரர்

2 hours ago 2

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் முடிவடைந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் தோல்வியை தழுவியது. இதனால் 10 வருடங்களுக்கு பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்தது. அத்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தது.

இந்த தொடரின் முதல் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி, அதன் பின் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலிய பவுலர்களின் அவுட் சைடு ஆப் பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்த அவர் தோல்விக்கு ஒரு காரணமாய் அமைந்தார். மேலும் இப்படிப்பட்ட பந்துகளில் அவுட்டாவதை அவர் நீண்ட காலமாக கொண்டிருக்கிறார்.

இதனால் விராட் கோலி இப்படி தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் பந்துகளில் விக்கெட்டை பறிகொடுக்கும் வரை இந்திய அணியின் பயிற்சியாளர்களான கம்பீர் மற்றும் அபிஷேக் நாயர் என்ன செய்கிறார்கள்? என்று முன்னாள் வீரர்களான கவாஸ்கர் மற்றும் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்தனர்.

இந்நிலையில் வருட கணக்கில் விராட் கோலி அந்த பலவீனத்தை கொண்டிருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதனால் கம்பீர் அதற்கு பொறுப்பாக முடியாது என்றும் அவர் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கவாஸ்கர் பாய், சஞ்சய் மஞ்ரேக்கர் பாய் ஆகியோர் விராட் கோலியின் அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பிரச்சினை நாள்பட்டது என்று தெரிவித்தார்கள். அதை கவுதம் கம்பீர் மற்றும் அபிஷேக் நாயர் ஆகிய பயிற்சியாளர்கள் குழுவினர் தீர்த்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். நாள்பட்டது என்ற வார்த்தையை நீங்கள் உபயோகிக்கும்போது அது இன்று மட்டும் இருக்கக்கூடியதாக இருக்காது. நீண்ட நாட்களாக இருந்திருக்க வேண்டும். அது தற்போது மீண்டும் வந்துள்ளது.

எனவே அதற்காக நீங்கள் 6 மாதங்களாக செயல்படும் பயிற்சியாளர்கள் குழுவை எப்படி குறை சொல்ல முடியும்?. கம்பீர் பிரச்சினையை தீர்க்காததால்தான் விராட் கோலி அவ்வாறு ஆட்டமிழக்கிறார் என்று உங்களால் கூற முடியாது. அந்த நாள்பட்ட பிரச்சினை சமீபத்தில் ஏற்பட்டிருக்க முடியாது. அப்படி பார்த்தால் நீங்கள் கடைசியாக இருந்த பயிற்சியாளர்கள் குழுவை பற்றியும் பேச வேண்டும். ஆனால் அவர்களை பற்றி யாரும் விமர்சிக்கவில்லை" என்று கூறினார்.

Read Entire Article