
சென்னை,
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவர் தனது 234-வது படமான 'தக் லைப்' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து பா.ரஞ்சித் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோரின் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளார். மேலும் கமலின் 237-வது படத்தை சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள்.
அன்பறிவ் சகோதரர்கள் இன்று பிறந்தாள் கொண்டாடுகிறார்கள். இந்தநிலையில், அவர்களுக்கு வாழ்த்து கூறும் வகையில் நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.