அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளின்டனும், பராக் ஒபாமாவும் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
அரிசோனா மாநிலத்தில் பிரச்சாரம் செய்த கிளின்டன், அமெரிக்கர்கள் மத்தியில் புலம்பெயர்ந்தவர்கள் மீது அச்ச உணர்வை உருவாக்க டிரம்ப் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
டிரம்புக்கும், கமலா ஹாரிஸூக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் அரிசோனா, மிச்சிகன் உட்பட 7 மாகாணங்களைச் சேர்ந்த 16 லட்சம் அமெரிக்கர்கள் வெளிநாடுகளிலிருந்து தபால் மூலம் வாக்களிக்க உள்ளதாகவும், தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அவர்கள் வாக்குகள் முக்கிய பங்குவகிக்கும் என கூறப்பட்டுள்ளது.