கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

8 months ago 50

கன்னியாகுமரி,

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக, விடுமுறை, பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கடற்கரையில் காலை சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபம், முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், காந்தி மண்டபம் உள்பட பல்வேறு பகுதிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் இடங்களை கண்டு களித்து வருகின்றனர். 

Read Entire Article