கன்னியாகுமரியில் கடலலையில் சிக்கி மாயமான சுற்றுலா பயணி 2 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு

2 hours ago 1

கன்னியாகுமரி: காந்தி மண்டபம் அருகே பாறையில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்றபோது அலையில் சிக்கிய பயணி சடலமாக மீட்கப்பட்டார். 2 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பணிக்குப் பின் சுற்றுலா பயணியின் உடலை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ் மீட்டது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர் நேற்று நாகர்கோவிலில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர். அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தை சுற்றிப்பார்க்க சென்றனர். அப்போது அங்கு 27 வயது விஜய் என்ற வாலிபர் உள்பட சிலர் காந்தி மண்டபத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட மரணப் பாறை இடத்துக்கு சென்றனர்.

இதையடுத்து பாறையில் நின்றபடி விஜய் செல்பி எடுத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் விஜய் கால் தவறி கடலில் விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உடனிருந்தவர்கள் விஜய்யை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் அலையில் சிக்கி கடலில் மூழ்கினார். இதுகுறித்து உடனடியாக இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது கடலில் மூழ்கிய வாலிபரை படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தீவிரமாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து 2-வது நாளாக அவரை தேடும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடல் அலையில் சிக்கி மாயமான சுற்றுலா பயணி விஜயின் உடல், டவர் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வாலிபர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கன்னியாகுமரியில் கடலலையில் சிக்கி மாயமான சுற்றுலா பயணி 2 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article