
கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு பகுதியில் சாலையோரம் பைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்பகுதியில் இன்று அதிவேகமாக கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது.
அப்போது, பைக்குகள் அருகே நின்றுகொண்டிருந்த முதியவர் மீதும் கார் மோதியது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட முதியவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இளைஞரை கைது செய்தனர். மேலும், உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரை ஓட்டிவந்த இளைஞரின் கட்டுப்பாட்டை கார் இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.