கன்னியாகுமரி: பிளஸ்-2 மாணவி கர்ப்பம்: சக மாணவன் தலைமறைவு

21 hours ago 2

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, பிளஸ்-2 முடித்து விட்டு தற்போது கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி மிகவும் சோர்வுடனும், வயிற்று வலியாலும் அவதிப்பட்டார். இதனால் தாயார் மாணவியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

அங்கு மருத்துவர் பரிசோதனை செய்ததில், மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், அவரிடம் நடந்த விவரத்தை கேட்டுள்ளார். அப்போது சம்பவத்தன்று தனது சகமாணவனின் வீட்டுக்கு நோட்டு, புத்தகங்கள் கொடுப்பதற்காக சென்றதாகவும், அப்போது வீட்டுக்குள் தனியாக இருந்த மாணவன், தன்னிடம் திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறி கதறி அழுதார்.

இதுகுறித்து தாய் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Read Entire Article