
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கனிம வலங்களை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரி ஆற்றூர் அருகே தேமானூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தது .
அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை அருகே இருந்த புருஷோத்தமன் என்பவர் வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதியது. லாரி மோதிய வேகத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்கும் சேதமடைந்தன.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.