
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் 'டாட்டூ' கடை தொழிலாளர்கள் 'டாட்டூ' தொழிலை செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர் . அந்த மனுவில் ,
கன்னியாகுமரி நகராட்சி மற்றும் தேவஸ்தானம் பகுதியில் கடந்த 10 வருடங்களாக 30க்கும் மேற்பட்ட 'டாட்டூ' கடைகள் நடத்தி வருகிறோம். இதில் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் இத்தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறோம். மேலும் அனைவரும் முறையாக 'டாட்டூ' பயிற்சி படித்த சான்றிதழ் பெற்றுள்ளோம்..
இந்நிலையில் மே 1-ம் தேதி 'டாட்டூ' கடைகளை நடத்த கூடாது என்று வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்ததால் அனைத்து 'டாட்டூ' கடைகளை அடைத்துள்ளோம். எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 'டாட்டூ' தொழிலை செய்ய அனுமதிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.