கன்னியாகுமரி கடற்கரை பகுதியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு..!!

1 month ago 5

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் கன்னியாகுமரி கடற்கரை பகுதியினை கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனிஷ் சாப்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் நேற்று (15.10.2024) கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., தலைமையில் புதிய திருப்பூர் வட்டார வளர்ச்சி கழகம் சென்னை நிர்வாக இயக்குநர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, இ.ஆ.ப., மழையினால் அதிகளவு பாதிக்கப்படும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

நாகர்கோவில் மாநகராட்சி, மீனாட்சி கார்டன். ரயில்வே காலனி, சுசீந்திரம், பழையாறு. சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகம், கன்னியாகுமரி கடற்கரை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., , புதிய திருப்பூர் வட்டார வளர்ச்சி கழகம் சென்னை நிர்வாக இயக்குநர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, இ.ஆ.ப. ஆய்வு மேற்கொண்டார்கள். நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மீனாட்சி கார்டன் செம்மாங்குளம் பகுதியிலுள்ள புதர்களை அகற்றி, கரைகளை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இரயில்வே காலனி ஓட்டுப்புரை தெருவிலிந்து வரும் கழிவுநீரானது செம்மாங்குளம் வழியாக இரயில்வே காலனி ஓடை வழியாக பழையாறில் கலக்கிறது. இப்பகுதிகளை தூர்வாரிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவளம் ஊராட்சிக்குட்பட்ட கே.எஸ்.எஸ் நகர் உப்புதண்ணீர் ஓடை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இயற்கை பேரிடர் பல்நோக்கு பாதுகாப்பு மையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடைபெற்ற ஆய்வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப. நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, துணை இயக்குநர் மீன்வளத்துறை சின்னகுப்பன். மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், அகஸ்தீஸ்வரம்வட்டாட்சியர் முருகன், கோவளம் ஊராட்சிமன்ற தலைவர் ஸ்டெனி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

 

The post கன்னியாகுமரி கடற்கரை பகுதியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Read Entire Article