கன்னட நடிகர் துருவா சர்ஜா பிறந்தநாள்: "மார்ட்டின்" படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

3 months ago 21

கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மார்ட்டின் படத்திற்கான திரைக்கதையை அர்ஜூன் எழுதியுள்ளார். இதில் துருவா சர்ஜா நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார்.பெரிய பொருள்செலவில் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகளால் இப்படம் உருவாகியுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆக்சன் திரைப்படமாக உருவான இது வருகிற அக்டோபர் 11-ம் தேதி இந்திய மொழிகள் மட்டுமல்லாது கொரியன், ஜப்பான், ஸ்பானிஷ் மற்றும் ரஷிய மொழிகளிலும் நேரடியாக வெளியாகிறது. இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

கன்னட நடிகர் துருவா சர்ஜா பிறந்தநாளையொட்டி "மார்ட்டின்" படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

A very Happy birthday to our Action Prince Dhruvasarja From Team ಮಾರ್ಟಿನ್ - మార్టిన్ - மார்ட்டின் - മാർട്ടിൻ - मार्टिन - Martin#MartinTheMovie Worldwide Releasing On October 11@DhruvaSarja @AP_Arjun_film @princekukm #MartinTheMovie#HappyBirthdayDhruvaSarja pic.twitter.com/EsygIjBmKn

— MARTIN (@Martinthemoviee) October 5, 2024
Read Entire Article