கனிமொழி எம்.பி. வலியுறுத்தல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுப்போம்

2 hours ago 1

சென்னை: திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள்.

ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான நவ. 25ல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post கனிமொழி எம்.பி. வலியுறுத்தல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுப்போம் appeared first on Dinakaran.

Read Entire Article