கனமழையால் மூடப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் இயங்குகிறது

8 months ago 48

சென்னை,

கனமழை காரணமாக சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா கடந்த 15-ந்தேதி முதல் மூடப்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து பொதுமக்களின் பார்வைக்காக கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்படுகிறது.

அதன்படி, இன்று (சனிக்கிழமை) முதல் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கான நுழைவுச்சீட்டு https://tnhorticulture.in/kcpetickets இணையதளம் வாயிலாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பறவையகம் மற்றும் ஜிப்லைனிற்கு மாலை 4 மணி வரை மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படும். இசை நீரூற்றுக்கு ஒரு நாளைக்கு 320 பேருக்கு மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதால் மாலை 4 மணி முதல் இணையதளம் வாயிலாக நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். மாலை 6 மணி வரை பொது நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வழங்கப்படும்.

Read Entire Article