கனமழையால் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு தள்ளிவைப்பு: நகராட்சி நிர்வாகத் துறை

7 months ago 34

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் அக்டோபர் 15 முதல் 18-ம் தேதி வரை நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு கனமழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட ஓர் அறிவிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் ஆகியவற்றில் பல்வேறு பதவிகளில் 2,576 காலியிடங்களை நிரப்புவதற்காக அக்டோபர் 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருந்த சானறிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு, கனமழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article