கனமழையால் குன்னூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

2 months ago 12

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குன்னூரில் நள்ளிரவில் பெய்த கனமழையால் சாலையில் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், மரம் விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்றிரவு கனமழை கொட்டியது. பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக, கிருஷ்ணாபுரம் ஆற்றோர சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. மேல் பாரத் நகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மண் சரிந்தது. காரை மண் குவியலில் இருந்து பொதுமக்கள் ஜேசிபி இயந்திர உதவியுடன் மீட்டனர். மழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குன்னூர் அருகே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read Entire Article