கனமழையால் அறுந்து விழுந்த மின் கம்பியால் 3 நாய்கள் உயிரிழப்பு: கடலூர் அருகே பரபரப்பு

3 months ago 18

கடலூர்: கடலூர் கோண்டூர் பகுதியில் திடீரென மின் கம்பி அருந்து விழுந்த நிலையில் மின்சாரம் தாக்கி நாய்கள் பலியாகின. இன்று அதிகாலை வேலையில் நடைபெற்ற நிகழ்வு என்ற நிலையில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் தொடர்ந்து சில நாட்களாக திடீர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே மழைக்காலம் தீவிரமாக தொடங்க உள்ள நிலையில் மின்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவித்துள்ளனர். இந்நிலையில் கடலூர் கோண்டூர் பாப்பம்மாள் நகர் பகுதியில் இன்று அதிகாலை திடீரென மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்துள்ளது.

மழை பெய்து தண்ணீர் தேங்கி கிடந்த நிலையில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதிகாலை வேளையில் அவ்வழியாக சுற்றித்திரிந்த மூன்று நாய்கள் அறந்து கிடந்த மின் கம்பி பகுதியில் நடமாடிய நிலையில் மின்சாரம் பாய்ந்து பலியாகின. இதற்கிடையே அவ்வழியாக பொதுமக்கள் கடந்து செல்ல முற்பட்ட பொழுது நாய்கள் செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மின் கம்பியும் அறுந்து கிடந்ததால் உடனடியாக மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மின்துறையினர் அறுந்த கிடந்த மின் கம்பியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை வேலை என்ற நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கனமழையால் அறுந்து விழுந்த மின் கம்பியால் 3 நாய்கள் உயிரிழப்பு: கடலூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article