கனமழையால் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை கைகளால் அகற்ற முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்

3 months ago 21
ஆம்பூரை அடுத்த மாதனூரில், நேற்றிரவு பெய்த கனமழையால் வீட்டின் கழிவறை மீது அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை கைகளால் அகற்ற முயன்ற 70 வயது முதியவர் குமரேசன், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடியிருப்பு பகுதி வழியாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பியை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி பல முறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். காரைக்குடி அருகே கால்வாயில் மீன் பிடிக்க நேற்றிரவு பத்தக்கட்டை அமைத்திருந்த அய்யாக்கண்ணு என்பவர், மீன்கள் சிக்கியுள்ளனவா என்பதை பார்க்க அதிகாலையில் சென்றபோது வழியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
Read Entire Article