கனமழை காரணமாக 17ம் தேதி வரை கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு

3 months ago 14

சென்னை: கனமழையின் காரணமாக, 17ம் தேதி வரை கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் 17ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பச்சை வழித்தடத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோவில் மாறி விமான நிலையம் மெட்ரோவுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் சேவை விவரம்
* காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும்:
முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்கு புறப்படும். கடைசி ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும்.

* காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை:
பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 5 நிமிட இடைவெளியில் ரயில்இயக்கப்படும்.
நீல வழித்தடத்தில் விம்கோநகர் மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

*காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்
* இரவு 10 மணி முதல் 11 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

The post கனமழை காரணமாக 17ம் தேதி வரை கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article