கனடாவில் கூட்டணி கட்சி எம்பிக்களின் கடும் எதிர்ப்பு எதிரொலி: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக முடிவு என தகவல்

1 day ago 2

கனடா: கூட்டணி கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்களின் போர்கொடிக்கு பணிந்த கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விரைவில் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் நியூ டெமாக்ரபி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி நடத்தி வரும் நிலையில், அவர் செயல்பாடுகள் குறித்து கூட்டணி கட்சிகள் சமீபத்தில் கடும் அதிருப்தி தெரிவித்தனர். பிரதமருக்கு எதிரான நாடாளுமன்றத்தில் விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக நியூ டெமாக்ரபி கட்சியின் தலைவர் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளும் லிவரால் கட்சி எம்.பி.க்கள் சிலரும் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இந்த ஆண்டு கனடா பொது தேர்தலை சந்திக்கும் நிலையில், ட்ரூடோவில் லிபரல் கட்சி பெரும்பான்மை மக்களின் ஆதரவை இழந்துள்ளதாகவும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவு பெருகி வருவதாகவும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பினை அடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விரைவில் லிபரல் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

The post கனடாவில் கூட்டணி கட்சி எம்பிக்களின் கடும் எதிர்ப்பு எதிரொலி: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக முடிவு என தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article