கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது

1 month ago 4

செங்கல்பட்டு: கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு இராட்டினங்கிணறு சந்திப்பு பகுதியில் இளைஞர் ஒருவர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக செங்கல்பட்டு நகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கத்தியுடன் சுற்றி திரிந்த இளைஞரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு பெரியநத்தம் அன்ணை அஞ்சுகம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் உதயக்குமார் (24) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து உதயக்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள சிறையில் அடைத்தனர். உதயக்குமார் ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

The post கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article