கத்தி முனையில் பிளஸ்-1 மாணவிக்கு தாலி கட்ட முயற்சி: வாலிபர் கைது

3 hours ago 2

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள மேல்இருளம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கார்த்திகேயன்(வயது 34). இவர், அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படித்து வரும் 16 வயதுடைய மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், சாலையில் நடந்த சென்ற அந்த மாணவியை வழிமறித்த கார்த்திகேயன், கத்தியை காட்டி மிரட்டி மாணவியின் கழுத்தில் தாலி கட்ட முயன்றார்.

இதை சற்றும் எதிர்பாராத மாணவி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்தனர். அங்கு கத்தி முனையில் மாணவிக்கு தாலி கட்ட முயன்ற வாலிபரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், அவரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் கார்த்திகேயனை பிடித்து பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, மாணவி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கார்த்திகேயனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Read Entire Article