கதிசக்தி திட்டம் 3 ஆண்டு நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

3 months ago 18

புதுடெல்லி: நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பிரதமரின் கதி சக்தி தேசிய பெருந்திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆனதையொட்டி, பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்தியாவின் உள்கட்டமைப்பைப் புரட்சிகரமாக்கும் நோக்கத்துடன் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பிரதமர் கதிசக்தி தேசியப் பெருந்திட்டம் கடந்த 2021 அக்டோபர் 13ல் உருவாக்கப்பட்டது.

இது பன்முக இணைப்பைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. துறைகளில் விரைவான, திறமையான வளர்ச்சியை இயக்குகிறது.வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற இந்தியா வேகத்தை அதிகரித்து வருவதற்காக கதிசக்திக்கு நன்றி. இது முன்னேற்றம், தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

The post கதிசக்தி திட்டம் 3 ஆண்டு நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article