கணவரை விவாகரத்து செய்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்

1 week ago 2

இம்பால்,

குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோம் (வயது 42). இவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார். இதனிடையே, மேரி கோமின் கணவர் கரங் ஆன்லிர் கோம். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவர் கரங் ஆன்லிர் கோமை மேரி கோம் விவாகரத்து செய்துள்ளார். கடந்த 2023 டிசம்பர் 20ம் தேதி கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக மேரி கோம் இன்று அறிவித்துள்ளார். மேரி கோம் தனது தொழில் கூட்டாளியான ஹிதிஷ் சவுதிரி என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் பரவின. மேரி கோம் நிறுவனத்தில் தலைவராக ஹிதிஷ் சவுதிரி செயல்பட்டு வருகிறார். இருவரும் காதலித்து வருவதாக பிரபல ஆங்கில நாளிதழில் செய்திகள் வெளியாகின.

இந்த சூழ்நிலையில் கணவர் கரங் ஆன்லிரை விவாகரத்து செய்துவிட்டதாக மேரி கோம் தெரிவித்துள்ளார். மேலும், ஹிதிஷ் சவுதியை தான் காதலிக்கவில்லை என்றும் எங்கள் இடையேயான உறவு தொழில் ரீதியிலானது மட்டுமே என்றும் மேரி கோம் தெரிவித்துள்ளார்.

Read Entire Article