கணவருடன் கடைக்கு சென்ற கமலா ஹாரிஸ்; வீடியோவுக்கு நெட்டிசன்கள் கண்டனம்... ஏன்?

2 weeks ago 3

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டவர் கமலா ஹாரிஸ். இந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில், கமலா ஹாரிஸ், அவருடைய கணவர் டக் எம்ஹாப் உடன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு செல்ல முடிவு செய்திருக்கிறார். இதன்படி, அவர்கள் இருவரும் கலிபோர்னியா மாகாணத்தில் வெஸ்ட்உட் பகுதியில் உள்ள ராஞ்ச் மார்கெட் ஆசியன் மளிகை கடைக்கு சென்றனர்.

இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இதனை பார்த்த நெட்டிசன்களில் சிலர் வீடியோ காட்சிகளை கவனித்து, கமலா ஹாரிசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அப்படி அந்த வீடியோவில் என்ன உள்ளது? என முதலில் தெரியவில்லை. நன்றாக கவனித்தபோது விசயம் தெரிய வந்தது.

ஷாப்பிங் செய்ய சென்ற ஹாரிஸ், உடன் பிளாஸ்டிக் பைகளை வைத்திருக்கிறார். 2019 தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், அதனை தடை செய்ய வேண்டும் என பேசினார்.

ஆனால், புதிய வீடியோவில் பிளாஸ்டிக் பைகளுடன் காணப்பட்ட ஹாரிசுக்கு கண்டன பதிவுகள் வெளியிடப்பட்டன. ஒருவர், நான் கூட பிளாஸ்டிக் பைகள் எல்லாம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை என நினைத்து விட்டேன் என்றும், மற்றொருவர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வேண்டும் என ஹாரிஸ் விரும்பினார். அதனை நான் நினைவுகூர்கிறேன் என்றும் கூளியுள்ளார்.

JUST IN: Kamala Harris and Doug Emhoff seen grocery shopping together with plastic bags, violating left-wing environmental doctrine - NYP pic.twitter.com/nDJMTgnbS6

— Eric Daugherty (@EricLDaugh) January 24, 2025
Read Entire Article